தொழிலாளா்களின் பாக்கிப்பணத்தை இல்லாமலாக்கிய இடைக்கால ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டவா் அமைச்சா் ரவீந்திர சமரவீர -மத்திய மாகாணசபை உறுப்பினா கணபதி கனகராஜ்
கடந்த முறை கூட்டு ஒப்பந்தம் முடிவடைந்த காலத்திலிருந்து புதிய கூட்டு ஒப்பந்தம் செய்த காலம்வரையிலான பாக்கிப்பணத்தை இல்லாமல் செய்த இடைக்கால ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டவர்களில் அப்போதைய பிரதி தொழில் அமைச்சா் ரவீநதிர சமரவீரவும் ஒருவா் அவருக்கு பாராளுமன்ற உறுப்பினா் திலகராஜ் புகழாரம் சூட்டுவதில் இருந்து அவரை பயன்படுத்தி எதிர்வரும் கூட்டு ஒப்பந்தத்தை குழப்பி அரசியலில் குளிர்காய முயற்சிப்பதையே காட்டுகிறது. என மத்திய மாகாணசபை உறுப்பினா் கணபதி கனகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தொிவிக்கப்பட்டுள்ளது.
2015ம் ஆண்டு தனியார்துறை ஊழியா்களுக்கு வழங்கப்பட்ட 2500 ரூபா சம்பள உயா்வை தோட்டத் தொழிலாளா்களுக்கும் பெற்றுக்கொடுப்பதாக தம்பட்டம் அடித்துவிட்டு கடைசியில் வேலைசெய்யும் நாளொன்றுக்கு 100 ரூபா படி இரண்டு மாதங்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது. அதுவும் அரசாங்க பணத்தில் இருந்து வழங்கப்படவில்லை தேயிலை சபையிலிருந்த தொழிலாளா்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்காக சேகாித்த பணத்தை இதற்கு பயன்படுத்தினார்கள். என்பதை மக்கள் நன்றாக அறிவார்கள்.
இந்த இரண்டு மாத கால கொடுப்பணவிற்காக பாக்கிப்பணத்தை கேட்கமாட்டோம் என்ற இரகசிய இடைக்கால ஒப்பந்தமொன்றில் கைசாத்திட்டு தோட்டத் தொழிலாளா்களை காட்டிகொடுத்தவா்கள் யார் என்பதையும் இந்த இடைக்கால ஒப்பந்தத்திற்கு துணைபோன துரோகிகளையும் மக்கள் இன்னும் மறந்துவிடவில்லை.
தோட்டத் தொழிலாளா்களின் சம்பளத்திற்கான கூட்டு ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு தோட்டத் தொழிலாளா்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல தொழிற்சங்கங்களையும் இணைத்துக்கொண்டு செயல்பட வேண்டும் என்பதில் இலங்கை தொழிலாளா் காங்கிரசின் தலைவா் ஆறுமுகன் தொண்டமான் உறுதியாக இருக்கிறார் அதன் முதற்கட்டமாகவே கடந்த 6ம் திகதி நடைபெற்ற கூட்டு ஒப்பந்தத்தில் ஒப்பமிடும் தொழிற்சங்கங்களின் கலந்துரையாடலாகும்.
இதன் அடுத்த கட்டமாக ஏனைய தொழிற்சங்க சமூக அமைப்புக்களின் கருத்துக்களை பெறுவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தோட்டத் தொழிலாளா்கள் சம்பளத்தை வழங்கவேண்டியது பெருந்தோட்ட கம்பனிகளே. இந்த கம்பனிகளின் தொழிலாளர் விரோத ஆடாவடித்தனத்திற்கு எதிராக அனைவரையும் ஒன்றுதிரட்ட இலங்கை தொழிலாளா் காங்கிரஸ் முயற்சி எடுத்துவரும் தருணத்தில் சிலா் புதிய அணிகளை உருவாக்கி எமது முயற்சியை முறியடிக்க முணைகின்றனா் அதுவும் தோட்டத் தொழிலாளா்களுக்கு எதிரான இடைக்கால ஒப்பந்தத்தில் மனசாட்சியில்லாமல் கையொப்பமிட்டவா்களுடன் கூட்டணியை உருவாக்க முயற்சிக்கின்றனா். இந்த இடைக்கால ஒப்பந்தம் ஒவ்வொரு தொழிலாழிக்கும் சுமார் 80 ஆயிரம் ரூபாவை இழக்க காரணமாகயிருந்தது. சிலரின் அரசியல் பிழைப்பிற்காக அப்பாவி தோட்ட தொழிலாளா்களின் சம்பளத்திற்கான கூட்டு ஒப்பந்தத்தை கேடயமாக பயன்படுத்த முற்படுகின்றனா்.
கூட்டு ஒப்பந்தமென்பது இலட்சக்கணக்கான தோட்டத் தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு நிர்ணயிக்கப்போகின்ற விடயமாகும். பெருந்தோட்ட கம்பனிகள் எம்மிடையே பிளவுகளை ஏற்படுத்துவதன் மூலம் சம்பள கோரிக்கையை வழுவிழக்க செய்யும் தந்திரத்தை கையாளுகின்றன. அற்ப அரசியல் தேவைகளுக்காக பெருந்தோட்ட கம்பனிகள் விரிக்கும் வளையில் சிக்கி சமூகத்தை சீரளிக்க வேண்டாமென சகலருக்கும் பகிரங்க வேண்டுகோள் விடுக்கின்றோம். எமது முழு சமூகத்தின் அழுத்தமும் சம்பளத்தை வழங்க வேண்டிய கம்பனிகளுக்கானதாக இருக்க வேண்டும். அப்போது தான் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிற பெருந்தோட்டங்களையும் அதை நம்பி வாழ்ந்துக்கொண்டிருக்கின்ற தொழிலாளா்களையும் காப்பாற்ற முடியும் எனயும் மத்திய மாகாண சபை உறுப்பினா் கணபதி கனகராஜ் தொpவித்துள்ளார்.
எஸ். சதீஸ்