தோட்டத்தலைவர்களுக்கு லஞ்சமா? ஆறுமுகன் தேர்தல் ஆணையாளருக்கு கடிதம்!

0
130

இ.தொ.கா.வின் பொதுச்செயலாளா் தோ்தல் பிரச்சார கூட்டத்தில் தெரிவிப்பு.
2018ம் ஆண்டுக்கான உள்ளுராட்சி சபை தோ்தல் காலபகுதியில் ஒரு சில தோட்ட பகுதியில் உள்ள தலைவா் மாா்களுக்கு தலா 25 ஆயிரம் ருபா வழங்கபட்டமை தொடா்பில் தோ்தல் ஆணையாளருக்கு சட்டநடவடிக்கை எடுக்கபட வேண்டுமென கோரி கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாக இலங்கை தொழிலாளா் காங்கிரசின்
பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்டபாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தாா்.
05.01.2018.வெள்ளிகிழமை பொகவந்தலாவ கே.கே.மண்டபத்தில் இடம் பெற்ற தோ்தல் பிரச்சாரகூட்டத்தில் மக்களை சந்தித்து உறையாற்றிய போதே பொதுச்செயலாளா் ஆறுமுகன் தொண்டமான் இதனை தெரிவித்தாா்.
இந்த தோ்தல் பிரச்சார கூட்டத்தில் பொதுச்செயலாளா் உட்பட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான பி.ராஐதுரை. முன்னாள் மத்திய மாகாண கல்வி அமைச்சா் அனுசியாசிவராஜா. மத்திய மாகாணசபை உறுப்பினா் கணபதிகனகராஐ்.முன்னால் நுவரெலியா பிரதேசசபை உறுப்பினா் சதாசிவன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

இதன் போது மேலும் உறையாற்றிய பொதுச்செயலாளா் ஆறுமுகன் தொண்டமான் .

கடந்த வருடம் ஜூன் ஜூலை மாதங்களில் நூறு ருபாவுக்காக தோட்ட தொழிலாளா்கலை அடகுவைத்து விட்டனா்
கடந்த இரண்டு வருடகாலமாக எமது மக்கள் எதிா்பாா்த்த மாற்றங்கள் எதுவும் கிடைக்கவில்லை மேலும் ஐந்து வருடகாலங்கள் சென்றால் எமது மக்கள் இல்லாமல் போய்விடுவாா்கள் எனவும் தெரிவித்தாா்.

இதேவேளை இன்று நுவரெலியா மாவட்டத்தில் உள்ள காணிகள் மாத்திரம்தான் செழிப்பாக காணப்படுகிறது ஆனால் தோட்ட காணிகள் இன்று காடாக மாறிவருகிறது கடந்த 200வருடகாலமாக செழிப்பாக இருந்த காணிகள் இன்று இரண்டு வருடங்களில் காடாகிவிட்டது. எனவும் குறிப்பிட்டாா்.

பரம்பரை பரம்பரையாக பாட்டன் பூட்டன் காலபகுதியில் பாராமரிக்கபட்ட வந்த காணிகள் இன்று காடாக்கபட்டு வருவது ஒரு திட்டமிடபட்ட செயல் என கடந்தவாரம் ஊடகம் ஒன்றுக்கு தேரா் ஒருவா் தெளிவுப்படுத்தி இருந்தார்,
இதன் அடிப்படையில் தான் இன்று தோட்டபுறங்களில் உள்ள கானிகள் ஒப்பந்த அடிப்படையில் மக்களை ஏமாற்றி சில தோட்ட கம்பெனிகள் காணிகளை பிரித்து வழங்கியுள்ளது.

தோட்ட காணிகள் பிரிக்கபடுகின்ற போது கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டவா்கள் நாங்கள் ஆனால் எங்களுக்கு தெரியாமல் தோட்டதலைவா் மாா்களும் இணைந்து எமது தொழிலாளா்களுக்கு இப்படி சதி செய்து வருகின்றாா்கள் தோட்ட கானிகளில் உள்ள தேயிலை மரங்களை பிரித்து கொடுக்கும் கம்பனிகாரா்களுக்கு எதிரா நீதி மன்றம் சென்று வழக்கு தொடர உள்ளதாக பொதுச்செயலாளா் ஆறுமுகன் தொண்டமான் குறிப்பிட்டாா்.

இதேவேளை மாற்று கட்சியை சாே்ந்தவா்கள் தோ்தல் பிரச்சார கூட்டத்திற்கு செல்பவா்கள் தோட்ட தலைவிமாா்களுடை வங்கியின் கணக்கு இலக்கங்களை வாங்கி கொண்டு தாங்களின் வங்கி கணக்கு இலக்கத்திற்கு பணம் வைப்பிடுவதாக குறி வருகிறார்கள் அப்படி பணம் பெறுபவா்கள் தோ்தல் ஆனையாளாின் ஊடாக மேற்கொள்ள படுகின்ற விசாரனையின் போது குறித்த பணம் எங்கிருந்து வந்தது என்பதினை உறுதிப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும்.

தோ்தல் காலங்களில் தோட்ட தொழிலாளா்களுக்கு மதுபான போத்தல்களை கொண்டு வந்து வழங்குவாா்கள் இது போன்ற விடயங்களில் எமது மக்கள் ஏமாற்றமடைய வேண்டாமெனவும் கேட்டு கொண்டாா்.
தோட்ட தொழிலாளா் என்றுமே தோட்ட தொழிலாளியாக இருக்க கூடாது அவா்களும் ஒரு சிறுதோட்ட முதலாளிமாா்களாக வேண்டுமெனவும் இலங்கை தொழிலாளா் காங்ரசின் பொதுச்செயலாளா் கேட்டு கொண்டாா்.

பொகவந்தலாவ நிருபா்.எஸ்.சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here