தோட்டத்தில் ஓய்வுபெற்ற 95 வயது மூதாட்டியை அழைத்து தேயிலை விற்பனை நிலையம் திறந்துவைப்பு!

0
93

புஸ்ஸல்லாவ பிளாண்டேசன் நிறுவனம் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்கி வருகின்றது. அதன் ஒரு கட்டமாக கண்டி நுவரெலியா பிரதான வீதியில் ரொத்சைல்ட் தோட்டத்தில் வெளிநாட்டு உல்லாச பிரயாணிகளுக்கு இலங்கை தேயிலையை கொள்வனவு செய்யும் நிலையம் ஒன்று திறந்து வைக்கபட்டது.

02 (2)IMG_1785

இதற்கு எந்த ஒரு உயர் அதிகாரியையோ அல்லது அரசியல்வாதியையோ பிரதம அதிதியாக அழைக்காமல் இந்த தோட்டத்தில் தொழில் புரிந்து ஓய்வு பெற்ற 95 வயதுடைய சோமசுந்தரம் முத்தம்மா என்ற வயோதிப மூதாட்டியை அழைத்து திறந்து வைத்தனர் இந்த செயல் அனைவரையும் ஒரு கணம் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

IMG_1681

இந் நிகழ்வில் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி சமிந்த சேனாரத்தன அவர்களுடன் இணைந்து தோட்ட முகாமையாளரகள், உத்தியோகஸ்தர்கள் உட்பட வெளிநாட்டவர்களும் கலந்தக் கொண்டார்கள்.

புஸ்ஸல்லாவ பிளாண்டேசன் நிறுவனம் தற்போது “டம்ரோ” நிறுவனத்தினால் நிறுவகிக்கபட்டு வருவது குறிப்பிடதக்கது. இந் நிறுவன தலைவரின் சிறந்த வழிகாட்டலே இவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க காரணமாக இருக்கின்றது
பா.திருஞானம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here