தோட்டத் தொழிலாளர்கள் கோருவது நிலையான சம்பள அதிகரிப்பையே! : கணபதி கனகராஜ்

0
150

இரண்டு மாதங்களுக்கு வழங்கப்பட போவதாக சொல்லப்படுகின்ற வேலைசெய்த நாட்களுக்கு நூறு ரூபா இடைக்கால நிவாரணத்துக்காக அல்லாமல் நிலையான சம்பள அதிகரிப்பையே தோட்டத்தொழிலாளர்கள் கோருகின்றனர் என
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உப தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் பத்தனை பிரதேசத்தில் நடைபெற்ற தொழிலாளர் சந்திப்புக்களின் போது தெரிவித்தார்.

கடந்த ஒன்றரை வருட காலமாக இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் பெருந்தோட்ட கம்பனிகளுடன் சம்பள அதிகரிப்பு தொடர்பாக பல சுற்று போச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.

தோட்ட கம்பனிகளின் தரப்பிலிருந்து சாதகமான பதில்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. ஏதாவது பொருத்தமற்ற காரணங்களை சொல்லி காலத்தை கடத்துவதிலேயே பெருந்தோட்ட கம்பனிகள் இருக்கின்றன.

கடந்த காலங்களில் கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்வதில் இவ்வளவு காலதாமதம் ஏற்படவில்லை என்பது உங்களுக்க தெரியும்.

தற்போது என்றுமில்லாதவாறு பெருந்தோட்ட கம்பனிகள் இவ்வாறு இழுத்தடிப்புக்களை செய்வதற்கு பல அரசியல் பின்புலங்கள் இருக்கவே செய்கின்றன. அதைப்பற்றி பேசி தொழிலாளர்களின் மத்தியில் முரண்பாடுகளை ஏற்படத்தாமல், தோட்டத் தொழிலாளர்களை ஒன்றிணைத்து பெருந்தோட்ட கம்பனிகளுக்கு சம்பள உயர்வினை வழங்குமாறு நிர்பந்தங்களை ஏற்படுத்த வேண்டியதே தற்போதைய தேவையாகும்.

கடந்த ஒன்றரை வருட காலப்பகுதியில் நாட்டில் தோட்டத் தொழிலாளர்களை தவிர்த்து ஏனைய சகல அரச, தனியார்துறையினருக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டிருக்கிறது. நட்டத்தில் இயங்கும் அரசாங்க நிறுவனங்களுக்கு நட்டத்தை காரணம் காட்டி சம்பள அதிகர்ப்பு வழங்கப்படாமல் நிறுத்தப்படவில்லை.

நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்து காணப்படுகின்றன.

இந்த விலைவாசி அதிகரிப்பை ஏனைய துறையினரால் ஓரளவிற்கு சமாளிக்க முடிந்தாலும், தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிர்கொள்ள முடியவில்லை.
, தற்போது அரசாங்கத்திடம் கடன் பெற்று இரண்டு மாதங்களுக்கு மட்டும் நாளொன்றுக்கு 100 ரூபா வீதம் தற்காலிக கொடுப்பனவை வழங்கப் போவதாக சில தரப்புக்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

இதை எப்படி 2500ரூபா சம்பள அதிகரிப்பென கருதமுடியும்? இரண்டு மாதங்களுக்கு பின் தொழிலாளர்களின் நிலை என்ன? வேலை செய்யும் நாட்களுக்கு 100ரூபா வீதம் அதுவும் இரண்டு மாதங்களுக்கு மட்டும் வழங்கிவிட்டு தோட்ட தொழிலாளர்களை ஏமாற்றுவதற்கு இடந்தரமுடியாது.

ஆகவே ஆறுமுகன் தொண்டமான் காட்டும் வழி ஒன்றுதான் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு சரியான தீர்வை பெற்றுக்கொடுக்கும் எனவும் கணபதி கனகராஜ் தெரிவித்தார்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here