தோட்டத் தொழிலாளர் சம்பளப் பிரச்சினை குறித்து பிரதமருடன் பேச்சுவார்த்தை!

0
133

பெருந்தோட்டத் தொழிலாளர் சம்பளப் பிரச்சினை குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

அலரி மாளிகையில் இந்த விசேட பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

பெருந்தோட்டத்துறை அமைச்சு, திறைசேரி, முதலாளிமார் சம்மேளனம் ஆகிய நிறுவனங்களின் பிரதானிகளுடன் பிரதமர் இந்த விசேட சந்திப்பினை நடத்தவுள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு ஏற்கனவே வழங்கப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிககைகள் குறித்து ஆராயப்பட உள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளங்களை உயர்த்துவதற்கு பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்குவதாக திறைசேரி இதற்கு முன்னதாக இணங்கியிருந்தது.

இந்த திட்டத்தை எவ்வாறு அமுல்படுத்துவது என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here