தோட்டத் தொழிலாளர் சம்பளப் பிரச்சினைகளை கையில் எடுக்கிறார் ஜனாதிபதி- தீர்வும் தருவேன் என்கிறார்.

0
35

தோட்டத் தொழிலாளர் சம்பளப் பிரச்சினை குறித்து எதிர்வரும் 12ஆம் திகதி முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சு நடைபெற விருப்பதாகவும், இந்தப் பிரச்சினையை தான் நேரடியாக கையாள எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சம்பள பிரச்சினைகளைப் பேசிவந்த மனுஷ நாணயக்கார, அமைச்சுப் பதவியும், பாராளுமன்ற உறுப்பினர் பதவியும் இழந்துள்ளார். இதனால் இந்த அமைச்சுப் பதவியை தான் பொறுப்பேற்று சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்த நிலையில், எதிர்வரும் திங்கட்கிழமை முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளன.

சமூக வலையத்தளங்களில் முன்வைக்கப்படும் ASK RANIL நிகழ்ச்சியில் கேள்விகளுக்கு நேரலையாக பதிலளிக்கும் நேரலை நிகழ்ச்சியில் பங்கேற்ற போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here