தோட்ட அதிகாரியின் செயலுக்கு ஈரோஸ் மலையக பிராந்தியம் கண்டனம்!

0
129

கடந்த ஓரிரு நாட்களாக லிந்துல்ல பகுதியில் மரண நிகழ்வொன்றில் அநாகரிகமாக நடந்துக்கொண்ட ட்றில்லிகூற்றி தோட்ட அதிகாரிக்கு எதிராக முகநூலில் பலபதிவுகளும் நூற்றுக்கணக்கில் பின்னூட்டங்களும் சமூக பற்றாளர்களால் பதிவேற்றப்படுகின்றன
இவர்களின் சமூக அக்கறை பலரை அந்த பிரச்சினையின் பக்கம் பார்வையை செலுத்தவைத்துள்ளது அந்த தோட்ட அதிகாரியின் மனிதாபிமானமற்ற இந்த செயல் மரணவிட்டார்களுக்கு எந்தளவு மனவுழைச்சலை ஏற்படுத்திருக்குமென்பதை எம்மால் புரிந்துக்கொள்ளமுடிகின்றது.

இந்த அராஜக செயலுக்கு ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் மலையக பிராந்திய கிளை வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதோடு இப்பிரச்சினையை வெளிக்கொணர்ந்த முகநூல் நட்புகளுக்கு எமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் மலையக பிராந்தியத்தில் நாமும் அரசியல் செயற்பாட்டாளர்கள் என்ற வகையில் எமக்கும் பொறுப்பு இருப்பதை உணர்கின்றோம் இப்பிரச்சினைக்கு நீதியை பெற்றுக்கொடுக்க எம்மால் முடிந்த முயற்சியை மேற்கொள்வோம் என்று கூறிக்கொள்வதோடு சம்பந்தப்பட்ட குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

ஈரோஸ் ஜனநாயக முன்னணி
மலையக பிராந்தியம் சார்பாக இரா ஜீவன் இராஜேந்திரன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here