கெர்க்கஸ்வோல்ட் மத்திய பிரிவு தோட்ட சிறுவர்களுக்கான கோது மாவுக்கு ஆப்பு.
மடுல்சிமை தேயிலை பயிர்செய்கை நிறுவனத்திற்கு கீழ் இயங்கும் பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மத்திய பிரிவில் உள்ள சிறுவர்களுக்கு மாதாந்தம் மனிதவள அபிவிருத்தி ஸ்தாபனத்தின் கீழ் வழங்கபடுகின்ற சிறுவர்களுக்கான கோதுமை மாவினை தோட்ட நிர்வாகம் வழங்குவதில் மறுப்பு தெரிவித்து வருவதாக பாதிக்கபட்ட பெற்றோர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
தோட்டத்தில் பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தைகளுக்கும் ஒருவயது முதல் ஆறுவயது வரை இந்த கோதுமை மா வழங்கபட வேண்டுமென்ற சட்டதிட்டங்கள் இருக்கின்றபோதும் சிறிய குழந்தைகளுக்கான கோதுமை மாவினை வழங்குவதில் தோட்ட நிர்வாகம் கெடுபிடியாக இருந்து வருவதாக மக்கள் மேலும் தெரிவித்தனர் .
இதுபோல் கடந்த இரண்டு மாதங்களாக இந்த குழந்தைகளுக்கான கோதுமை மா வழங்கபட வில்லையெனவும் தெரிவிக்கின்றனர்.
ஒரு தோட்டத்தில் தொழில் புரிக்கின்ற பிள்ளைகளுக்கு மாத்திரம் இந்த மா வழங்கபட்டுவருவதாகவும் தொழில் புரியாத பெற்றோர்களுடைபிள்ளைகளுக்கு இதுவரை காலம் வழங்கிய கோதுமை மாவை தோட்ட நிர்வாகம் கடந்த இரண்டு மாதங்களாக வழங்குவதில்லையெனவும் குறிப்பிட்டனர் .
இது குறித்து கெர்க்கவோல்ட் தோட்ட உதவி முகாமையாளர் இமேஸ்ஏமந்தவை தொடர்பு கொண்டு வினவியபோது இது தொடர்பாக எனக்கு எவ்வித முறைபாடுகளும் கிடைக்கவில்லை இந்த பிரச்சினை தொடர்பாக இதற்கு பொறுப்பான உத்தியோகத்தரோடு கலந்துறையாடிவிட்டு இதற்கான முடிவொன்றை கூறுவதாக தெரிவித்தார்.
இதேவேலை கெர்க்கஸ்வோல்ட் தோட்டத்திற்கு பொறுப்பான சேமநல குடும்ப உத்தியோகத்தர் ஏசுமலரை தொடர்பு கொண்டு வினவியபோது தோட்ட தொழிலாளர்களுடைய பிள்ளைகளுக்கான கோதுமை மாவினை நிறுத்துமாறும் அதற்கான சுற்றுநிருபம் ஒன்றும் நிறுவனத்தினால் அனுப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவை இவர்களின் மாறுபட்ட கருத்தின் உண்மை தன்மையை அறிந்து கொள்ள மடுசிமை தேயிலை பியிர் செய்கை நிறுவனத்தின் கெர்க்கஸ்வோல்ட் தோட்டத்திற்கு பொறுப்பான பொது முகாமையாளர் டி.வென்மதிராஜாவை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் அது பயனளிக்கவில்லை.
(பொகவந்தலாவ நிருபர் .எஸ்.சதீஸ்)