கடந்த வரவு செலவுத் திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 2500 ரூபா சம்பளத்தை வழங்க உடன்பாடு காணப்பட்டுள்ளதாக தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கலந்துரையாடலில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தொழில்துறை அமைச்சர் ஜோன் செனவிரத்ன, அமைச்சர் மனோ கணேசன் ஆகியோருடன் தோட்ட துறைமார்களின் சங்கமும் கலந்துகொண்டனர்.
இந்தக் கலந்துரையாடலின்படி, எதிர்வரும் இரு வாரங்களில் தோட்டத் தொழிலாளர்களுக்கான 2500 ரூபா சம்பள அதிகரிப்பு பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.