தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகள் எதிர்காலத்தில் என்னை போல் ஒரு அமைச்சராக வேண்டும்!!

0
149

தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகள் எதிர்காலத்தில் என்னை போல் ஒரு அமைச்சராக வேண்டும் என்கிறார் .அமைச்சர் திகாம்பரம் 

எதிர் வரும் காலங்களில் தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளும் என்னை போல் அமைச்சராக உருவாக வேண்மென மலைநாட்டு பதிய கிராமங்கள் தோட்டஉட்பட்டமைப்ப மற்றும் சமூதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார் 05.02.2018. கொட்டகலை பகுதியில் முன்னெடுக்பட்ட தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இந்த பிரச்சார கூட்டத்தில் மேலும் குறிப்பிடுகையில் எனது தாய் ஒரு தோட்டதொழிலாளி எனது தந்தை ஒரு கங்கானி எனது பெற்றோர்கள் பட்ட கஷ்டங்கள் எனக்கும் நன்றாக தெரியும் ஆகையால்தான் தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகள் என்னை போன்று வரவேண்டுமென தெரிவித்தார் மாற்று கட்சிகார்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறிவருகிறார்களாம் தோட்ட தொழிலாளர்களுடைய ஊழியர் சேமலாப நிதியை யானை திண்டுவிட்டதாகவும் பூனை திண்டுவிட்டதாகவும் மலையகத்தில் அதிகமான போதைபொருள் பாவனை இடம் பெற்று வருவதாக கூறி பொய்யான பிரச்சாரங்களில் ஈடுபட்டு மக்களை திசை திருப்ப முயலுகின்றனர் எனவே எமது மக்கள் தெளிவாக இருக்கவேண்டமெனவும் அவர் கேட்டுகொண்டார்.

ஆனால் இன்று அதிகமான போதைபொருளை கொட்டகலை பகுதியில் தான் பாவிப்பவர்கள் அதிகமாக இருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார் .

கடந்த காலங்களில் எமது மக்களை ஏமாற்றி வந்தவர்கள் தற்பொழுது என்னிடம் மாட்டி கொண்டார்கள் 2015ம் ஆண்டோடு அவர்களுடைய ஆட்டங்கள் அனைத்து முடிவடைந்து விட்டது.

ஆனால் இன்று சக்தி தொலைகாட்சியும் ரங்காவும் நான் மலையகத்திற்கு ஒன்றுமே செய்வில்லையென கூறி என்னை விமர்சித்து வருகிறார்கள் ஆனால் ரங்காவுக்கும் தெரியுமோ என்று தெரியவில்லை மலையகத்தில் மாத்திரம் நான் 5000கும் மேற்பட்ட தனிவீடுகளை அமைத்துள்ளேன் என்பதையும் இவ்விடத்தில் சொல்லிக்கொள்ள விரும்புவதாகவும் அமைச்சர் திகம்பரம் கறிப்பிடார் .

எமது மக்களை 75வருடங்களாக ஏமாத்தியவர்கள் மலையகத்திற்கு எதனை செய்து இருக்கிறார்கள் ஆனால் நான் அமைச்சர் ஆகி மூன்று வருடங்களில் தனிவீடமைப்ப்பு திட்டத்தை கொண்டுவந்து அதற்கான காணி உறுதி பத்திரங்களையும் வழங்கியுள்ளதாக மேலும் குறிப்பிட்டார் .

பொகவந்லதாவ நிருபர் எஸ்.சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here