தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணம் இருபதாயிரம் வழங்க முன்வர வேண்டும்.ராதாகிருஸ்ணன் எம்.பி வழியுறுத்தல்.

0
24

நாட்டில் காணப்படுகின்ற பொருட்களின் அதியுச்ச விலையேற்றத்தால் பெருந்தோட்ட தொழிலாளர்கள் மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.இந்நிலையில் தீபாவளி பண்டிகையை மிக நெருக்கடியான சூழ்நிலையில் கொண்டாடப்பட வேண்டிய சூழ்நிலைக்கு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் உள்ளாகியுள்ளனர்.எனவே தோட்டத்தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக இருபதாயிரம் ரூபாவை வழங்க தோட்ட கம்பனிகள் முன்வர வேண்டுமென மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில் நாட்டில் தற்போது விலைவாசி நாளுக்கு அதிகரித்த வண்ணமே உள்ளது.மிக வேகமாக அதிகரிக்கப்பட்ட பொருட்களின் விலை ஆமை வேகத்திலேயே குறைப்படுகின்றது.இந்நிலையில் தோட்ட தொழிலாளர்களின் வறுமானத்தில் மிக சந்தோஷமாக தீபாவளி பண்டிகையை கொண்டாட முடியாத சூழ்நிலைக்கு தோட்ட தொழிலாளர்கள் உள்ளாகியுள்ளனர்.

எனவே பெருந்தோட்ட கம்பனிகள் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டில் காணப்படுகின்ற பொருட்களின் விலையேற்றத்தை கருத்திற் கொண்டு தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ரூபா இருபதாயிரத்தை வழங்க முன்வர வேண்டுமென மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வே.ராதாகிருஸ்ணன் பெருந்தோட்ட கம்பனிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here