எதிர்வரும் ஒக்டோபர் மாதம் கைச்சாத்திடபடஉள்ள கூட்டு ஒப்பந்தத்தில் தோட்ட தொழிலாளர்களுக்கு வாழ்க்கை செலவுக்கேற்ப சம்பள உயர்வு வழங்கபட வேண்டும். என்கிறார் அகில இலங்கை தோட்டதொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்னசாமி
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் கைச்சாத்திடப்பட உள்ள கூட்டு ஒப்பந்தத்தில் தோட்ட தொழிலாளர்களுக்கு வாழ்க்கை செலவுக்கேற்ப சம்பள உயர்வு வழங்கபட வேண்டுமென அகில இலங்கை தோட்டதொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்னசாமி தெரிவித்தார்
08.06.2018.வெள்ளிகிழமை ஹட்டன் நகரில் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த தோட்ட தொழிலாளர்களை தெழிவுபடுத்தும் துண்டுபிசுரத்தின் போது இதனை தெரிவித்தார். இதன் போது ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவித்த தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்னசாமி தோட்ட தொழிலாளர்களின் நெருக்கடியான வாழ்க்கைக்கு அரசாங்கம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கபட வேண்டும் இன்று பொருட்களின் விலை எரிபொருளின் விலை சேவைகட்டனங்கள் என்பன அதிகரித்து கொண்டே போகிறது மாவின் விலை 100ரூபா அரிசியின்விலை 100ரூபா ஆனால் தோட்ட தொழிலாளர்களுக்கு கிடைக்கவேண்டிய வேதனம் மாத்திரம் உரிய வகையில் கிடைக்கபெறுவதில்லையென தெரிவித்தார்.
தோட்டதொழிலாளர்கள் முகம் கொடுக்கவேண்டிய பிரச்சினைகளுக்கு மத்தியில் தோட்ட தொழிலாளர்களை தெழிவுபடுத்துவதற்காக ஹட்டன் மாநாகரில் இன்று நாங்கள் துண்டு பிரசுரத்தில் ஈடுபட்டுள்ளளோம். தோட்ட தொழிலாளர்களுடைய சம்பள பிரச்சினையை உரிய காலவரைக்குள் கூட்டு ஒப்பந்தில் கைச்சாத்திடபட வேண்டும் மறுபுறம் தோட்ட தொழிலாளர்களை அடகுவைத்திருக்கும் இந்த ஒப்பந்த முறையில் சில மாற்றங்களை கொண்டுவர வேண்டுமெனவும் தெரிவித்தார்.
(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)