தலவாக்கலை லோகி தோட்டம் மிடில்டன் பிரிவில், தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக அத்தோட்டத்தை சேர்ந்த 100 க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் 14.06.2018 அன்று அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.உரிமைகள் மற்றும் சலுகைகள் தமக்கு பெற்றுக்கொடுக்கவில்லை என தெரிவித்தே இந்த போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தாம் முருங்கை மரம் வெட்டுவதற்கு ஒப்பந்த அடிப்படையில் தமக்கு பெற்றுக்கொடுக்கப்பட்ட வேலைக்கு தாம் வேலை முடித்த பிறகும் இதுவரை தோட்ட நிர்வாகத்தினால் கொடுப்பனவு வழங்கப்படவில்லை.
தோட்ட நிர்வாகம் தேயிலை தோட்டங்களை காடுகளாக்கி சுத்தம் செய்ய நடவடிக்கைகளை எடுக்காது 18 கிலோவுக்கு அதிகமான தேயிலை கொழுந்தினை கொய்து தரும்படி வழியுறுத்துகின்றனர்.
எனவே இந்த விடயத்தில் தோட்ட நிர்வாக அதிகாரிக்கும், தொழிலாளர்களுக்கும் இடையில் வாக்குவாதமும் முறுகள் நிலையும் தோன்றியுள்ளது.
பலமுறை தோட்ட அதிகாரி தொழிலாளர்களை தரகுறைவாக பேசுவதாகவும், அடாவடி தனமாக நடந்துக் கொள்வதாகவும் தெரிவித்தே இந்த ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
எனவே இந்த விடயத்தில் தொழிற்சங்கங்கள், மற்றும் சம்மந்தப்பட்டவர்கள் தீர்க்கமான முடிவினை துரிதமாக பெற்றுத்தர வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மேலும் தெரிவித்தனர்.
(க.கிஷாந்தன்)