அரசியல் ரீதியிலான பின்னடைவை சந்திக்க நேரிடும் என்ற பயத்தினாலேயே அரசாங்கம் மாகாணசபை தேர்தலை நடத்த பின்நிற்கிறது என மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார். சாமிமலை பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர்
2015ம் ஆண்டு இந்த நாட்டு மக்கள் மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுடன் தற்போதைய அரசாங்கத்திற்கு வாக்களித்து ஆட்சிபீடம் ஏற்றினார்கள். இதில் குறிப்பாக இந்த நாட்டில் வாழுகின்ற சிறுபாண்மை மக்களின் பங்களிப்பே தீர்மானிக்கும் சக்தியாக இருந்தது. ஆனால் கடந்த மூன்றரை ஆண்டுகளில் இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் மக்கள் திருப்தியடையவில்லை. அதனாலே கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் அரசாங்கம் விரலை சுட்டுக்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டது.
புதிய அரசியல் யாப்பை உருவாக்கி இந்த நாட்டின் நீண்டகால இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீpர்வை வழங்கப்போவதாக வாக்குறுதி வழங்கப்பட்டது. ஆனால ; 19ம் அரசியல் திருத்தத்தின் மூலம் ஜனாதிபதியின் அதிகாரத்தை குறைத்து பாராளுமன்றத்தை நான்கு வருடங்களுக்கு கலைக்க முடியாத வகையில் அரசாங்கத்தின் ஆயுட்காலத்தை உறுதிப்படுத்தப்படுத்திக்கொண்டு இப்போது புதிய அரசியல் யாப்பை உருவாக்க முடியாது என பகிரங்கமாக சொல்லப்படுகிறது. அப்படி என்றால் எப்போது தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்கப்போகிறது? கடந்த அரசாங்க காலத்தில் அழுத்கம வன்முறை சம்பவத்தில் பெரும் பாதிப்பை எதிர்நோக்கிய முஸ்லீம் மக்களுக்கு இந்த அரசாங்க காலத்தில் திகன சம்பவம் கட்டவிழ்த்து விடப்பட்டது. மலையகத்தில் ஐம்பதாயிரம் வீடுகள் கட்டப்படும் என்ற வாக்குறுதியை வழங்கி ஆட்சிபீடம் ஏறிய அரசாங்கம் இதுவரை எத்தனை வீடுகளை மக்களுக்கு கையளித்துள்ளது? அரச வேலைவாய்ப்புக்ளில் மலையக இளைஞர்கள் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர் , எவ்விதமான காத்திரமான அபிவிருத்திகளும் மேற்கொள்ளப்படவில்லை. கடந்த அரசாங்க காலத்தில் திட்டமிடப்பட்டிருந்த பல்வேறு அபிவிருத்த வேலைத்திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. பெருந்தோட்ட காணிகளை பெரும்பாண்மை இனத்தவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவது நாளாந்த நடவடிக்கையாகிவிட்டது. பொதுவாக நாட்டில் பொருட்களின் விலைவாசி அதிகரிப்பு வறுமை, வேலைவாய்ப்பின்மை போன்றவற்றால் மக்கள் விரக்தியடைந்துள்ளனர். மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கத்திடம் எவ்வித திட்டமும் இல்லை என்பதனால் அதற்காக தேர்தலை பிற்போடுவது தீர்வாகாது.
கடந்த மூன்றரை ஆண்டு ஆட்சியில் மக்கள் திருப்தியடையவில்லை என்பதனால் தேர்தல் தோல்வியை தவிர்ப்பதற்காக மாகாணசபை தேர்தல் முறையை மாற்றுவது என்ற சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் இப்போது எந்த முறையில் மாகாணசபை தேர்தலை நடத்துவது என்ற சர்ச்சையில் அரசு ஈடுபட்டு வருகிறது. அரசாங்கம் மீண்டும் மாகாணசபை தேர்தலை பின்போடுவதற்கு வழிதேடாமல் ; குறிப்பிட்ட காலப்பகுதிக்குல் மக்களுக்கு வழங்கிய வாக்குறிதிகளை நிறைவேற்றி மக்களின் ஜனநாயக உரிமைக்கு வழிவகுக்க வேண்டும். எனவும் மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்தார்.
பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்