தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் நாடளாவிய ரீதியில் வெற்றி பெற்ற மாநகர சபை, நகர சபை, பிரதேச சபை உறுப்பினர்கள் 104 பேருக்கான சத்தியப் பிரமான நிகழ்வு இன்று 23-03-2018 கொழும்பு அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோகணேசன், கூட்டணியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான பழனி திகாம்பரம், பாராளுமன்ற உறுப்பினர்களான எம். திலகராஜா, ஏ. அரவிந்தகுமார், மாகாண சபை உறுப்பினர்களான எம். ராம், எம். உதயகுமார், சரஸ்வதி சிவகுரு, கே.ரி. குருசாமி மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பொதுச் செயலாளர் ஏ.லோரன்ஸ் உட்பட பல முக்கியஸ்தர்கள் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்கள்.
பாணா தங்கம்