தலவாக்கலை நகர சபை பொது மைதானத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதின கூட்டம் 07.05.2018 அன்று இடம்பெற்றது. இக்கூட்டத்தில் பல பகுதிகளிலிருந்து பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.கலந்து கொண்ட ஆதரவாளர்களால் வீசப்பட்ட பொலித்தீன், பிளாஸ்டிக் போத்தல்கள், பேப்பர், யோகட் கப் போன்ற கழிவு பொருட்கள் மைதானத்தில் மேதின கூட்டம் நிறைவுப்பெற்ற பின் ஆங்காங்கே சூழலுக்கு அசுத்தமான நிலையில் காட்சியளிக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் காணப்பட்ட வடிக்கான்களில் குப்பைகள் நிறைந்திருந்தமை சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.
இவ்வாறு காட்சியளிக்கப்பட்ட கழிவு பொருட்கள் தலவாக்கலை நகர சபை ஊழியர்களால் 08.05.2018 அன்று காலை மைதானம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு சேகரிக்கப்பட்ட குப்பைகளை உழவு இயந்திரம் மூலம் கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடதக்கது.
(க.கிஷாந்தன்)