நடிகர் ஷாருக்கான் உயிருக்கு ஆபத்து ; 24 மணிநேரமும் அதிகரிக்கப்பட்ட பாதுகாப்பு

0
111

ஒய் ப்ளஸ் 5 துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு அதிகாரிகள் உள்பட 6 தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் நடிகர் ஷாருக்கானுடன் 24 மணிநேரமும் இருப்பார்கள்.
பொலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் வந்திருப்பதால் அவருக்கு Y+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.‘ஜவான்’ உள்ளிட்ட படங்களின் வெற்றியைத் தொடர்ந்து பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் வந்திருப்பதால், மகாராஷ்டிர அரசாங்கம் Y+ பாதுகாப்பு வழங்கியுள்ளது.

அதன்படி, ஒய் ப்ளஸ் 5 துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு அதிகாரிகள் உள்பட 6 தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் ஷாருக்கானுடன் 24 மணிநேரமும் இருப்பார்கள்.நடிகர் ஷாருக்கான் உயிருக்கு ஆபத்து இருப்பதாக பொலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையிலேயே இந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்ய பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.மேலும், பொலிவுட் நடிகர் ஷாருக்கானின் பாதுகாப்புக்கு முன்னதாக இரண்டு பொலிஸார் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here