நபிகள் நாயகம் போதனையை, அனைவரும் பின்பற்றி வாழ்வில் உயர்வு பெற வேண்டும்!

0
132

ஈகைக்கு இலக்கணம் வகுக்கும் ரமழான் திருநாளைக் கொண்டாடும் உலகெங்கும் உள்ள இஸ்லாமிய உறவுகளுக்கு ரமழான் வாழ்த்துக்களை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

உலகமக்கள் அனைவரும் இன்புற்று வாழவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில், ரமழான் மாதத்தில் முஸ்லிம்கள், 30 நாட்கள் நோன்பு இருந்து ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கி மகிழ்வர்.

இந்த புனித நாளில் தூய்மையான எண்ணத்துடன் எளிமையாக வாழுங்கள், ஏழைகளுக்கு உதவுங்கள், பசித்தவர்களுக்கு உணவளியுங்கள், வீணான பேச்சுக்களையும், செயல்களையும் தவிர்த்து, கடமைகளை செய்யுங்கள், அனைவரிடத்திலும் அன்பு செலுத்துங்கள் என்ற நபிகள் நாயகம் போதனையை, அனைவரும் பின்பற்றி வாழ்வில் உயர்வு பெற வேண்டும்.

நாம் அனைவரும் ஒற்றுமையாக, சகோதரத்துவத்துடன் வாழ்ந்து, நாடு வளம் பெற பாடுபடுவோம். அனைத்து இஸ்லாமிய உறவுகளுக்கும் ரமழான் நல்வாழத்துக்கள் என தெரிவுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here