நமுனுகுல தோட்டத்தில் ஒருவர் கற்பாறையில் இருந்து தவறி விழுந்து பலி!

0
116

நமுனுகுல தோட்டத்தில் காவலாளி ஒருவர் கற்பாறையில் இருந்து தவறி விழுந்து பலியாகியுள்ளார்.

பதுளை, நமுனுகுல மாதுளாவத்த தோட்டத்தில் வசிக்கும் செல்லையா சந்திரசேகரன் (வயது 55) என்பவரே கற்பாறையிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படித் தோட்டத்தில் சிலர் சட்டவிரோதமாக தேயிலை பறித்துக்கொண்டிருப்பதை அறிந்து, அவர்களை பிடிப்பதற்காக சென்றபோதே இவர் கற்பாறையிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக, ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவரது சடலம், பிரேத பரிசோதனைக்காக பசறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here