தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, நாமல் ராஜபக்ஷ ஆகியோர் கையொப்பம் இட்டிருக்கவில்லை என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கூறினார்.
நேற்று நாடாளுமன்றில் இடம்பெற்ற நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பின் பின்னர் நடத்திய ஊடக சந்திப்பில் நிதியமைச்சர் இவ்வாறு கூறினார்.
இதன்போது தனக்கு ஆதரவாக வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவிப்பதாகவும் நிதியமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.
நிதியமைச்சருக்கு எதிரான குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை 94வாக்குகளால் தோல்வியடைந்ததும் குறிப்பிடத்தக்கது.