ஒன்றினைந்த எதிர்கட்சியினர் எதிர்பார்பதைபோல அரசாங்கத்தை நடத்த முடியாது என கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்தார்.அம்பேவெல பாற்பண்ணைக்கு 22.03.2018 உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டபோதே இவ்வாறு தெரிவித்தார் அமைச்சர் உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் கலந்துகொண்ட மேற்படி விஜயத்தின் போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர்
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் திட்டங்களை யாரும் கட்டுபடுத்த முடியாது நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வர ஒன்றினைந்த எதிர்கட்சியினர் முயற்சிக்கின்றனர் இந்த பிரேரணையில் ஒன்றினைந்த எதிர்கட்சி அங்கதவர்களும் ஸ்ரீ சுதந்திர கட்சியின் சிலர் கை ஒப்பம் வைத்திருக்கலாம் ஆனால் ஐக்கிய தேசிய கட்சியில் உள்ள யாரும் கையொப்பம் வைக்கமாட்டார்கள் என தெரிவித்தார்.
மேலும் 2020 ம் ஆண்டுவரை பிரதமராக ரணில் விக்ரமசிங்க அவர்களே இருப்பதுடன் ஜனாதிபதி தேர்தலின் போது ஊழலை ஒழித்து ஊழல் வாதிகளை கைது செய்வதாக கூறியே ஐனாதிபதி மைத்திரிபால சிரிசேன ஐனாதிபதியானார் அந்த வாக்குறுதிக்கமைய ஊழல் வாதிகளை பிடிக்க புதிய சட்டமொன்றை உறுவாக்கப்படுக்கின்றது.
இதற்கு ஒன்றினைந்த எதிர்கட்சியினர் இப்போதே எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்து விட்டனர். எவ்வாறான எதிர்ப்புகள் வந்தாலும் அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டங்களை யாராலும் தடுக்க முடியாது அம்பேவெல பாற்பண்ணையை பெருப்பேற்கும் போது 1 லட்சத்து 20000 லீட்டர் பால் கிடைத்தது. ஆனல் தற்போது 3 லட்சம் வரை அதிகரித்துள்ளது எதிர்காலத்தில் தேசிய ரீதியில் கொண்டு செல்வதே எனது திட்டம் எனவும் தெரிவித்தார்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்