நரகத்தில் விழுந்த நாட்டை மீட்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது

0
44

முறையான திட்டம், அனுபவம் மற்றும் சர்வதேச தொடர்புகள் என்பவற்றின் காரணமாகவே தனியொரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போதும் எவ்வித நிபந்தனைகளும் இன்றி நாட்டைப் பொறுப்பேற்றதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இன்று காலை பாராளுமன்றத்தில் விசேட உரை ஒன்றை நிகழ்த்திய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்.நரகத்தில் விழுந்த நாட்டை மீட்க முடியும் என்ற நம்பிக்கை தனக்கு இருந்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சம்பள சீர்திருத்தங்களுக்கு பல முறையீடுகள் செய்யப்பட்ட போதிலும், அரசாங்கத்தின் தற்போதைய வருமானம் அத்தகைய கோரிக்கைகளை பரிசீலிக்க போதுமானதாக இல்லை என்றும், அத்தகைய சம்பள சீர்திருத்தங்களை அடுத்த ஆண்டு பரிசீலிக்க முடியும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here