நரைமுடியா டோன்ட் ஒரி – இந்த ஹேர் டைய போடுங்க

0
101

இன்று இருக்கக்கூடிய இளம் தலைமுடிகளுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்து இருப்பது இளநரை பிரச்சனை தான். தற்போது இவர்கள் சிறு வயதிலேயே இளநரை முடியை பெற்று விடுவதால் கடுமையான மன அழுத்தத்திற்கும் ஆளாக இருக்கிறார்கள்.

அப்படி இளநரை இருப்பவர்கள் அதை இயற்கையான முறையில் எப்படி சரி செய்ய முடியும் என்பதை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

மேலும் இளநிரையை தடுப்பதற்காக எண்ணற்ற செயற்கைப் பொருட்களை பயன்படுத்தி பக்க விளைவுகளை இவர்கள் உண்டு பண்ணிக் கொள்கிறார்கள். இந்தக் கட்டுரையில் நீங்கள் காண போகக்கூடிய எந்த ஹேர் டை ஆனது இயற்கை பொருட்களால் செய்யப்பட்டது. எனவே பக்க விளைவுகள் ஏதும் ஏற்படாது.

இயற்கையான ஹேர் டை செய்ய தேவையான பொருட்கள்
1.மருதாணி பவுடர் ஒரு டேபிள் ஸ்பூன்

2.அவுரி பவுடர் 3 டேபிள் ஸ்பூன்

3.வெதுவெதுப்பான நீர் தேவையான அளவு

மேற்கூறிய மூன்று பொருட்களை பயன்படுத்தி தான் நாம் இயற்கையான ஹேர் டை உருவாக்க உள்ளோம். இந்த மூன்று பொருட்களையும் நீங்கள் பயன்படுத்தினாலே உங்கள் முடியில் இருக்கக்கூடிய இளம் நரைகளை எளிதில் விரட்டி அடிக்கலாம். அதுவும் 48 நாட்களுக்குள் இருந்த இடம் தெரியாமல் அந்த நரை முடிகள் மாறும் அல்லது மறையும்.

சுத்தமான பவுலை எடுத்துக்கொண்டு அதில் ஒரு டீஸ்பூன் மருதாணி பவுடர் மற்றும் மூன்று டீஸ்பூன் அவுரி பொடியை சேர்த்து அதனோடு வெதுவெதுப்பான நீரையும் சேர்த்து விடுங்கள். எந்த கலவையை நன்கு கலக்கி பேஸ்ட் போல் மாற்றி விடுங்கள். பிறகு பத்து நிமிடங்கள் காத்திருக்கவும்.

இந்தக் கலவை பத்து நிமிடங்கள் ஊறிய பிறகு உங்கள் தலைமுடிகளில் எங்கெல்லாம் நரைமுடி உள்ளதோ அந்த இடத்தில் எல்லாம் நன்கு அப்ளை செய்யவும். ஒன்றரை மணி நேரம் அளவு இந்த கலவையானது உங்கள் தலையில் அப்படியே இருக்கட்டும்.

இதனை அடுத்து நீங்கள் உங்கள் தலையை நன்றாக அலசி குளித்து விடுங்கள். வாரத்தில் இரண்டு முறை நீங்கள் தலையில் இப்படி அப்ளை செய்து குளித்து வருவதன் மூலம் நரைமுடி என்ற பேச்சுக்கே இடம் தெரியாத அளவு உங்கள் முடி மாறிவிடும்.

நீங்கள் எந்த ஹேர் டை பேஸ்டை பயன்படுத்தும் போது உங்கள் தலையில் எண்ணெய் வைத்து இருக்கக் கூடாது என்பதை மறந்து விடாதீர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here