மத்திய மாகாண சபை உறுப்பினர் இரா.ராஜாராம் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான வீ.எஸ்.இராதாகிருஸ்ணன் அவர்களின் கிராமிய உட்கட்டமைப்பு விசேட வேலை திட்டத்தின் கீழ் அக்கரபத்தனை, வூட்டுவள்ளி தோட்ட, நல்லதண்ணி பிரிவு விளையாட்டு மைதான அபிவிருத்திக்காக 1.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு மாகாண சபை உறுப்பினரால் அடிக்கல் நாட்டப்பட்டது.
இந் நிகழ்வில் மலையக மக்கள் முன்னணியின் அக்கரபத்தனை அமைப்பாளர்,காரியாலய உத்தியோகஸ்த்தர்கள் தோட்ட தலைவர் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தோட்ட தலைவர் மற்றும் முன்னால் நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர் திரு.நல்லமுத்து,திரு.பரமசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்.