சிவனொளிபாதமலை அடிவாரத்தில் அமைந்துள்ள நல்லத்தண்ணி நகரில் வாகனங்களை செலுத்துவதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாக சிவனொளிபாதமலைக்கு வரும் யாத்திரிகள் தெரிவிக்கின்றனர்.நகரின் ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளின் முன் வாயில் பகுதியில் பிரதான பாதையின் ஒருப்பகுதியை வர்த்தக நிலையத்தினரால் ஆக்கிரமிக்கப்படுவதனாலே இவ்வாறு நெரிசல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
குறித்த வர்த்தக நிலையங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகனங்கள் மாத்திரமே தரித்து நிறுத்தமுடியும் என உரிமையாளர்களினால் அறிவிக்கப்படுதானால் யாத்திரிகள் தாம் வருகைத்தரும் வாகனங்களை திருப்பிக்கொள்ள கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
நகரின் பிரதான வீதியின் இரு மருங்கிளும் உள்ள இவ்வாறான தடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு யாத்திரிகள் தெரிவிக்கின்றனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்