கதிர்காமத்திலிருந்து நல்லத்தண்ணி நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து பஸ் பாதையை விட்டு விபத்துக்குள்ளானதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா பகுதியிலே 08.03.2018 மாலை 3 மணியளவிலே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற இ.போ.ச பஸ் வண்டியானது எதிரே வந்த கனரக வாகனமொன்றிற்கு இடம்கொடுக்க முற்பட்டபோதே பாதையை விட்டு விலகி டிக்கோயா ஆற்றின் காரையோத்தில் விபத்துகுள்ளானது.
சாரதியின் சாரமர்த்தியத்தால் உயிராப்பத்துக்கள் ஏற்பாடாமல் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணை தொடர்வதாகவும் அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்