மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மஹேந்திரனுக்கு முக்கிய உயர்பதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்திய இலங்கை பொருளதார (எட்கா) உடன்படிக்கை உட்பட்ட பல முக்கிய உடன்படிக்கைகளை இறுதி நிலைப்படுத்தும் பணிகள் அவரிடம் கையளிக்கப்படவுள்ளன.
அரசாங்கம் தேர்தலின்போது வாக்குறுதி வழங்கிய 10லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு என்ற திட்டத்துக்காக அவர் திட்டங்களை மேற்கொள்ளவுள்ளார்
அத்துடன் சீனா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடனான உடன்படிக்கைகளையும் அவர் இறுதி நிலைப்படுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் இருந்து இன்று நாடு திரும்பும் மஹேந்திரன், நாளை மறுநாள் அலரிமாளிகையில் இடம்பெறும் பல்வேறு துறைசார் நிபுணர்களின் மாநாட்டில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.