நவகமுவ, கொரதொட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இரண்டு லொறிகளுக்கு இடையே சிக்குண்டே நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் உடகம, பலாபத்வல பிரதேசத்தை சேர்ந்த 31 வயதான நபர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, நவகமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.