நவம்பர் 20இல் இதொகாவின் நிர்வாகசபையில் அதிரடி மாற்றங்கள் நிகழும்!

0
115

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபைக் கூட்டம் அதன் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இன்று கூடியது.

இதன்போது நிர்வாகசபை கலைக்கப்பட்டதுடன், புதிய நிர்வாகசபையை தெரிவுசெய்வதற்காக கட்சியின் தேசிய சபைக் கூட்டத்தை நவம்பர் 20 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆறுமுகன் தொண்டமானின் மகனுக்கு இளைஞர் அணித் தலைவர் பதவியை வழக்கும் வகையிலேயே நிர்வாக கட்டமைப்பில் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளது. அவருக்கு உப தலைவர் பதவியும் சர்வதேச ஆலோசகர் பதவியும் வழங்கப்படவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இளைஞர் அணி தலைவராக ஜீவன் தொண்டைமானை தேர்வு செய்யும்படி தற்போதைய இதொகா இளைஞர் அணி அமைப்பாளர் ஆறுமுகனிடம் பரிந்துரை செய்துள்ளதாகவும் தெரியவருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here