நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட நாகசேனை நகரத்தில் உள்ள பஸ் தரிப்பிடம் அசுத்தமான நிலையில் காணப்படுவதால் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக இப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
20 வருடங்களுக்கு முன்பு நிர்மாணிக்கப்பட்ட பஸ் தரிப்பிடம் தற்போது மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
இதில் அதிகமான போஸ்;;டர்கள் ஒட்டப்பட்டுள்ளதுடன் தேவையற்ற பொருட்களும் பிரதேச மக்களால் போடப்பட்டுள்ளதுடன் இரவு நேரங்களில் மதுபாவிக்கும் இடமாகவும் உள்ளது.
பஸ் தரிப்பிடத்தின் உற்பகுதியில் பாரிய குழியொன்றும் காணப்படுகின்றது.
மழைக்காலங்களில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பேருந்துக்காக நகரத்தில் உள்ள கடை வீதிகளில் காத்திருக்கின்றனர்
இதனால் வியாபார நடவடிக்கைகள் மிகவும் பாதிக்கப்படுவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே பொது மக்களின் நலன் கருதி நுவரெலியா பிரதேச சபை அதிகாரிகள் இதனை
புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்.
அக்கரப்பத்தனை நிருபர்