நாடாளுமன்றுக்கு எதிராக உயர்நீதிமன்றில் வழக்குத்தாக்கல்!

0
98

பிரதமரின் கோரிக்கையின் பிரகாரம், சிங்கராசா வழக்குத் தீர்ப்பை இரத்துசெய்வதற்கு, சபாநாயகர் நடவடிக்கை எடுப்பதை தடுத்து நிறுத்தும் வகையில் இடைக்கால தடையுத்தரவொன்றை பிறப்பிக்குமாறு உயர்நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை இரத்துச் செய்வதற்கு சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை என்றும் கட்டளையிடுமாறும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

சட்டத்தரணி நாகாகந்த கொடிதுவக்கினால் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவில் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர், பிரதமர் மற்றும் சபாநாயகர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் ஜூலை 7ஆம் திகதியன்று இடம்பெற்ற விவாதத்தில் போது உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள சிங்கராசா வழக்கின் தீர்ப்பை இரத்துச்செய்யுமாறு, சபாநாயகரிடம் கோரிநின்றார்.

சிங்கராசா வழக்கு தீர்ப்பின் பிரகாரம், வெளிநாட்டு நீதிமன்றங்கள் அல்லது நிறுவனங்களின் கட்டளைகளை, இலங்கை நீதிமன்றங்கள் செயற்படுத்துவதற்கு கட்டப்பட்டவை அல்ல என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here