பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை நுகேகொடை , பாகொடை வீதியில் உள்ள அவரது வீட்டில் வைத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய பிரஜை ஒருவரின் நிறுவனப் பங்குகளை போலியான அட்டோர்னிப் பத்திரம் தயார் செய்து மோசடி செய்து பல மில்லியன்களை ஏமாற்றிய குற்றச்சாட்டு அவர் மீது வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பொலிஸ் நிதி மோசடிப் பிரிவினர் மேற்கொண்டிருந்த நீண்ட விசாரணையின் பின்னர் இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உதய கம்மன்பில மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் நிதி மோசடிப் பிரிவு தலையமைகத்துக்கு அழைத்து வரப்படுவதாக பொலிஸ் நிதிமோசடிப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.