பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் ஆயுதப்படைகளை வரவழைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (2) பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
நாற்பதாவது அதிகாரமாக இருந்த பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் 12வது பிரிவின் கீழ் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்திருந்தார்.