நாடு முழுவதும் கொரோனா அதிதீவிர சிகிச்சைப் பிரிவு மீண்டும் ஆரம்பம்!

மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருவதால், கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அதிதீவிர சிகிச்சைப் பிரிவொன்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சமன் பத்திரன தெரிவித்துள்ளார்.இவ்வைத்தியசாலையில் கடந்த சில நாட்களில் மூன்று கர்ப்பிணித் தாய்மார்கள் உட்பட நான்கு பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தைப் பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுமாறும், கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவுக்கு அருகில் உள்ள தடுப்பூசி அறையில் தடுப்பூசி போடப்படும் எனவும், வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் வாரத்தில் ஐந்து நாட்கள் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை டோஸ் வரை தடுப்பூசி போடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.