நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டு இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். “நாட்டு மக்கள் வன்முறையை தவிர்க்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
இந்த கொடூரமான நேரத்தில் இறந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
குறிப்பாக அமரகீர்த்தி அத்துகோரலவுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் எல்லா வகையிலும் நல்ல மனிதராகவே செயற்பட்டார்.
இதுவரையில் இடம்பெற்ற அனைத்து விடயங்களும் வருத்தத்திற்குரிய விடயமாகும். வன்முறையை நிறுத்துவோம்” என நாமல் தனது டுவிட்டர் பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.