நாட்டில் சில பகுதிகளில் 12 மணித்தியால நீர் வெட்டு : வெளியான அறிவிப்பு

0
27

நாட்டின் சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

இதனடிப்படையில், ஞாயிற்றுக்கிழமை (11) காலை 9:00 முதல் இரவு 9:00 மணிவரை நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீதுவை பிரதேச செயலக பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகள், பியகம, மஹர, தொம்பே, ஜா எல, கட்டான மற்றும் பேலிகொடை நகர சபைக்குட்பட்ட பகுதிகளிலும் நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஜா எல, கட்டுநாயக்க,மினுவாங்கொடை மற்றும் கம்பஹா பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளுக்கும் நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here