நாட்டில் சீரற்ற காலநிலை காரணமாக அனைத்து வாகன சாரதிகளுக்கும் ஓர் முக்கிய அறிவித்தல்!!

0
106

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலைகளில் அதிகபட்சமாக மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் வாகனங்களை செலுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை கோரிக்கை விடுத்துள்ளது.

காலநிலையின் சீரற்ற தன்மையினால் விபத்துக்களை தவிர்ப்பதற்கு சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் பயணங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் அதன் பணிப்பாளர் எஸ் ஓப்பநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

மழை பெய்கின்ற வேளைகளில் வாகனங்களின் வெளிச்ச விளக்குகளை ஒளிரவிட்டப்படி வாகனங்களை செலுத்துவது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நிலவும் தொடர்ச்சியான கடும் மழை காரணமாக களுகங்கை , கிங்கங்கை மற்றும் அத்தனகலை ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

களுகங்கை மில்லகந்த பிரதேசத்தில் பெருக்கெடுக்க வாய்ப்புள்ளதால் மதுராவல , ஹொரணை , புளத்சிங்கள,இங்கிரிய மற்றும் பாலிந்த நுவர போன்ற பிரதேச மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் , கிங்கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் வௌ்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்பதால் பத்தேகம , போபே -போத்தல , நாகொடை , நியாகம , தவலம மற்றும் நெலுவ போன்ற பிரதேச மக்களுக்கு அவதான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் , அத்தனகலை ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் , நீர்கொழும்பு , ஜாஹெல , மினுவங்கொடை மற்றும் கம்பஹா பிரதேசங்களை சேர்ந்த தாழ்நிலத்தில் வசிக்கும் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டுமென நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை,நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி , களுத்துறை , கேகாலை , இரத்தினபுரி , நுவரெலியா , பதுளை , காலி , குருணாகலை மற்றும் கொழும்பு மாவட்டங்களுக்கு அந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டது.

அதேபோல் , அம்பலாங்கொடை பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் குறித்த வீடு கடுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மண் மேடு சரிந்து விழும் போது குறித்த வீட்டினுள் மூன்று பேர் இருந்துள்ள நிலையில் , அவர்கள் உயிர் பிழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை , பொல்பிட்டியில் இருந்து அதுருகிரிய வரையிலான மின் கட்டமைப்பில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக துல்ஹிரிய , ரம்புக்கனை , கேகாலை பிரதேசங்களில் தற்போது மின்சார தடை ஏற்பட்டுள்ளது.

அதேபோல் , நிலவும் சீரற்ற காலநிலையால் மரத்தின் கிளையொன்று உடைந்து வீழ்ந்ததன் காரணமாக குருணாகலை , மதுகம , ஹொரணை மற்றும் அகலவத்த பிரதேசங்களிலும் மின்சார தடை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

மேலும் மலையகத்திலும் சீரற்ற வானிலை நிழவுவதால் ஹட்டன் நுவரெலியா பிரதான பாதை பனிமூட்டத்தால் மூடிவுள்ளதாகவும் தெரியவருகின்றது. ஆதலால் பிரதான போக்குவரத்து சாரதிகளை மிகுந்த அவதானத்தோடு வாகனத்தை செலுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here