நாட்டில் தேங்காயிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் அதற்கு தென்னை அபிவிருத்தி அதிகார சபை பொறுப்புக்கூற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை தேங்காய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் புத்திக டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி கடந்த இரண்டு மாதங்களில் 2 மில்லியன் தேங்காய்கள் பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாட்டில் தேங்காயிற்கு தட்டுபாடு நிலவுவதற்கு சாத்தியம் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் தென்னை அபிவிருத்தி அதிகார சபை உரிய முறையில் பொறுப்புக் கூற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.