இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்தத்தால் 23 உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளன. இதில் உயிரை
மதிக்காமல் பொருட்கள் சேகரிக்க சென்றதால் 14 உயிர்கள் பரிதாபகரமாக இழக்கப்பட்டுள்ளன என கூறுகிறார் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார.
28.05.2018ம் திகதி அன்று நுவரெலியா மாவட்டத்தின் அபிவிருத்திக் குழு கூட்டம் நுவரெலியா மாவட்ட செயலக கேட்போர்
கூடத்தில் நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் ரோஹன புஷ்பகுமார தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில்
இணைத்தலைவர்களான மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற
உறுப்பினர் கே.கே. பியதாஸ ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கேபண்டார பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் இராஜாங்க கல்வி அமைச்சர் வீ. ராதாகிருஷ்ணன் பா.உ. மயில்வாகணம் திலகராஜ் பா.உ. சீ.பீ. ரத்நாயக்க மத்திய
மாகாண அமைச்சர் மருதபாண்டி ராமேஷ்வரன் ம.மா.உ. பீ. சக்திவேல் ஆர். ராஜாராம் எஸ். ஸ்ரீதரன்
பிலிப்குமார் மற்றும் நகரசபை பிரதேச சபை தலைவர்கள் உட்பட பல அரச முக்கியஸ்தர்களும்
கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்வைக்கப்பட்டது.அமைச்சர் பாலித்த ரங்கேபண்டார கருத்து தெரிவிக்கையில் வெள்ளத்தால் மண்சரிவினால்பாதிக்கப்பட்டவர்களுக்கு மூன்று மாதத்திற்குள் சீமெந்து வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். அதற்காக 175மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடை உணவுகள் அரசாங்கத்தினால் வழங்கி வைக்கப்படும்.
டீ. சந்ரு