நாட்டில் பொருளாதார சிக்கல்கள் மட்டுமல்லாமல் ஜனநாயகத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

0
86

நாட்டில் பொருளாதார சிக்கல்கள் மட்டுமல்லாமல் ஜனநாயகத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது ஒரு புறம் தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடாத்தாமல் காலம் கடத்தப்பட்டு வருகிறது,தேர்தல் ஆணைக்குழு மற்றும் நீதி மன்றங்களுக்கு இருந்த சுயாதீன தன்மை இப்போது இல்லாதாக்கப்பட்டுள்ளன.நாட்டில் தற்போது சர்வதிகார ஆட்சி போன்று தான் நாட்டில் தற்போது நடைபெற்று வருகிறது. என நவ ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார் ஹட்டன் நவ ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் ..இப்போது நாம் பார்க்கின்ற போது இப்போது இருக்கின்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னர் நாட்டு மக்களுக்கு பாரிய அளவில் எதிர்ப்பார்ப்பு இருந்தது. ராஜபக்ஸ குடும்பத்தினால் பாதிக்கப்பட்ட நாட்டு பொருளாதாரத்தினை மீட்டெடுத்து நாட்டை காப்பாற்றுவார் என்று மக்கள் மத்தியில் ஒரு கனவு இருந்தது.

ஆனால் ஆரம்பத்திலே அவர் நாட்டின் உண்மையான நேர்மையான ஜனாதிபதியாக தன்னை அடையாளப்படுத்தி நாட்டினை பொறுப்பேற்று வாக்குறுதிகளை வழங்கி வீர வசனம் பேசி வந்தார். ஆனால் நாட்டில் சிறந்த குள்ள நரியாக ரணில் விக்கிரமசிங்க திகழ்கிறார். என்பது உண்மையில் வேதனை அளிக்கக்கூடியது.இப்போது இருக்கின்ற ஜனாதிபதியின் ஒரே நோக்கம் நான் இந்த நாட்டிலே ஜனாதிபதி வரிசையிலே இடம்பெற வேண்டும்.என்பது என்று அனைவருக்கும் புலப்பட ஆரம்பித்துள்ளது.

இவர் ஜனாதிபதியாக பொருப்பேற்ற பின்னர் இந்த நாட்டில் எவ்வித அபிவிருத்தியும் ஏற்படவில்லை.யாரை ஒழித்து விட்டு பாராளுமன்றத்திற்கு வந்தாரோ அந்த ராஜபக்ஸ குடுபத்தினரை கட்டம் கட்டமாக பாராளுமன்றத்திற்கு உள்வாங்கி இப்போது பதவிகளையும் வழங்கிவருகிறார்.பார்க்கின்ற போது ராஜபக்ஸ குடுமம்பத்தின் வம்சத்தை சார்ந்தவர் போல் தோன்றுகிறது.எனவே ரணில் விக்கிரசிங்க அவர்களினால் இந்த நாட்டை மீட்க முடியாது நாடு மீண்டும் படு பாதாளத்திற்கு செல்லும் இந்த நாட்டை மீட்கக்க்கூடிய ஒரே ஒரு நபர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க அம்மையார் மற்றும் தான் காரணம் அவருடைய காலத்தில் நாட்டில் அபிவிருத்தி ஏற்பட்டது.

அனைத்து மக்களுக்கு சுதந்திரமாக இருக்க கூடிய நிலை ஏற்பட்டது சர்வதேசத்தின் தொடர்புகள் மற்றும் உதவிகள் நிறைந்து காணப்பட்டன.எனவே பாராளுமன்றத்திற்கு பெசில் ராஜபக்ஸ போன்றவர்களை கொண்டு வந்தது போல் அவரையும் கொண்டு வந்து இந்த நாட்டின் ஜனாதிபதியாக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here