நாட்டு மக்களின் வறுமையை ஒழிப்பதே ஜனாதிபதியின் இலக்கு : சாகல ரத்நாயக்க!

0
25

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கை மக்களின் வறுமையை போக்குவதற்கும் குழந்தைகளின் போஷாக்கை அதிகரிப்பதற்கும் முன்னுரிமை அளித்து வருவதாக ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் சாகல ரத்நாயக்க இதனை வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய பல வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் யோசனையின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட ‘அஸ்வசும’ வேலைத்திட்டம் இலங்கையின் வறுமை ஒழிப்புக்கான முன்னோடி பணியாகும், எனவே சற்றும் அரசியல் மயப்படுத்தப்படாத அஸ்வசும, அதற்கு வலுவான பங்களிப்பை வழங்கும் எனவும் அவர் கூறுகிறார்.

மேலும் எதிர்கால சந்ததியை ஆரோக்கியமான சந்ததியாக கட்டியெழுப்புவது இன்றியமையாதது என்பதால், பட்டினியை ஒழிப்பதற்கு மட்டுமன்றி நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் போஷாக்கு முக்கிய பங்கு வகிக்கும் காரணியாக உள்ளது என சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here