நாட்டை நேசிக்கும் மனிதர்களை உருவாக்குவது நமது முக்கியமான பணி! தந்தை மைக்கல் ஞானராஜ்!

0
107

நாடு நன்றாக இருக்க வேண்டும், நாடு செழிக்க வேண்டும். நாட்டில் இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

நாட்டில் வாழும் அனைத்து இன மக்களும் இது எங்கள் நாடு என்று சொந்தம் கொண்டாடும் அளவுக்கு அனைத்து மக்களும் சமத்துவத்தோடு வாழும் சூழல் நாட்டில் நிலவ வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு சிந்தித்து பேசி , செயல்படும் மனிதர்களை உருவாக்க எங்களால் ஆனதை செய்வது எமது முக்கிய பணி என்று நாங்கள் கருதுகிறோம். ஆனாலும் இதனை மனித பலத்தினால் மட்டும் செய்து விட முடியாது, என தந்தை மைக்கல் ஞானராஜ் தெரிவித்தார்.

இவர் மேலும் தெரிவிக்கையில் இறைவனின் சிந்தையோடும் வழிகாட்டுதலோடுமே இதனை செய்யமுடியும் என்பதையும் நாம் சொல்லித்தான் ஆக வேண்டும்.
நாடு நன்றாக இருக்க நாட்டின் தலைவர்கள் மத்தியில் நாட்டை சரியான பாதையில் நடத்திச் செல்லும் ஞானமும் விவேகமும் ஆளுமையும் இருக்க வேண்டும். அந்த ஞானமும் விவேகமும் இறைவனிடம் இருந்தே வருகிறது என்பதை வேதாகமம் மிகத் தெளிவாக கூறுகிறது.

ஆலோசனையும் மெய்ஞ்ஞானமும் என்னுடையவைகள்ளூ நானே புத்தி, வல்;லமை என்னுடையது. என்னாலே ராஜாக்கள் அரசாளுகிறார்கள், பிரபுக்கள் நீதிசெலுத்துகிறார்கள். என்னாலே அதிகாரிகளும், பிரபுக்களும், பூமியிலுள்ள சகல நியாயாதிபதிகளும் ஆளுகை செய்து வருகிறார்கள்.” என்று வேதாகமம் கூறுவதன் மூலம் ஆட்சி செய்கிறவர்களின் அதிகாரமும் அவர்களுக்கான ஞானமும் ஆலோசனையும் தேவனிடமிருந்தே வருகிறது.

என்று வேதம் கூறுகிறது. ஆட்சி செய்கிறவர்களின் அதிகாரமும் தலைமைத்துவமும் தேவனிடமிருந்தே வருகிறது என்பதை தலைவர்கள் எப்போதும் ஞாபகம் வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். இவ்வாறு நாட்டின் தலைவர்களுக்கு நல்ல ஞானமும் விவேகமும் கிடைக்க வேண்டும் என்று நாட்டின் தலைவர்களுக்காக பிராத்தனை செய்வது மக்களின் கடமையாகும்.

மக்கள் நாட்டை நேசிப்பவர்களாக இருந்தால் தான் அவர்களால் நாட்டின் தலைவர்களுக்காவும் பிராத்தனை செய்ய முடியும். நமது நாட்டின் பிரதம மந்திரி அவர்களின் அரசியல் வாழ்வில் நாற்பது வருடம் நிறைவடைந்திருக்கும்.
வேளையில் நாட்டை நடத்தி செல்லும் ஞானம் அவருக்கு கிடைக்க வேண்டும் என நாம் பிராத்திக்க வேண்டும். நம்மை பொறுத்த வரையில் நாட்டின் தலைவர் எந்த கட்சியை சேர்ந்தவர் என்பது முக்கியமல்ல் . அவரை மக்களே தங்கள் தலைவராக தேர்ந்தெடுத்துள்ளார்கள் . அவருக்கான அதிகாரம் முக்கியமாகும்.

நாட்டின் பிரதம மந்திரி கௌரவ ரனில் விக்கரமசிங்க அவர்களின் அரசியல் வாழ்வில் நாற்பது வருடம் நிறைவு பெற்றது தொடர்பாக அவருக்கும் நாட்டிற்கும் ஆசி வழங்குவதற்காக நடைபெற்ற பிராத்தனை நிகழ்வில் அருளுரை வழங்கிய நோர்டன் பிரிஜ் துதித் தோட்ட தலைமைப்போதகர் தந்தை மைக்கல் ஞானராஜ் அவர்கள் இதனை தெரிவித்தார்.

அக்கரப்பத்தனை நிருபர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here