நானுஒயா நகர பேருந்து தரிப்பிடம் குறித்து அறிக்கை ஒன்றை சமர்பிக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது!

0
289

நுவரெலியா பிரதேச அபிவிருத்தி கூழு கூட்டத்தில் நானுஒயா நகர பேருந்து தரிப்பிடம் குறித்து அடுத்த பிரதேச அபிவிருத்தி கூழு கூட்டத்தில் அறிக்கை ஒன்றை சமர்பிக்குமாறு நானுஒயா பொலிஸாருக்கு அறிவுருத்தபட்டுள்ளது.

நுவரெலியா பிரதேச அபிவிருத்தி கூழு கூட்டம் 12.03.2018.திங்கள் கிழமை காலை 10 மணியில் இருந்து மாலை 03மணி வரை நுவரெலிய பிரதேச்செயலாளர் போதிமான அவர்களின் தலைமையில் நுவரெலியா பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

இந்த பிரதேச அபிவிருத்தி கூழு கூட்டத்தில் இனைதலைவர்களான நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ், எஸ்.பி.ரத்நாயக்க,பியஸ்ரீ ஆகியோர் கலந்து கொண்டதோடு இலங்கை தொழிலாளர் காங்ரசின் சார்பில் இனைதலைவராக நியமிக்கபட்ட மத்திய மாகாண சபை உறுப்பினர் பி.சக்திவேல் கலந்து கொள்ளவில்லை.

இதன் போது அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக கலந்து ஆலோசிக்கபட்டதோடு கடந்த வருடம் 06ம் மாதம் நானுஒயா பகுதியில் பாரஊறுதி ஒன்றில் பாடசாலை மாணவி ஒருவர் மோதுண்டு உயிர்இழந்தமையினால் அப்பகுதியில் ஏற்பட்ட பதற்ற நிலைகாரணமாக கடந்த 07ம் மாதம் இடம் பெற்ற அபிவிருத்தி கூழு கூட்டத்தின் போது நானுஒயா பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி பியந்த அமரசேகரவினால் நானுஒயா பகுதியில் காணபடுகின்ற மஞ்சல் கோட்டு கடவையை வேறு ஒரு இடத்திற்கு மாற்றபட வேண்டுமென கோறிக்கை ஒன்று முன்வைக்கபட்டது.

நானுஒயா நகரில் பேருந்து தரிப்பிடம் ஒன்று இருந்தபோதிலும் ஹட்டனில் இருந்து நுவரெலியா, டயகமயில் இருந்து நுவரெலியா,மற்றும் தலவாகலை நுவரெலியா ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்துமே நானுஒயா பேருந்து தரிப்பிடத்தில் பேருந்துகளை நிருத்தி பயணிகளை ஏற்றும் போது பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்குவதாக நானுஒயா நகரில் உள்ள பேருந்து தரிப்பிடத்தினை வேறு ஒரு இடத்திற்கு மாற்றம் செய்யபட வேண்டுமென கடந்த வருடம் 07ம் மாதம் இடம் பெற்ற பிரதேச அபிவிருத்தி கூழு கூட்டத்தில் கோறிக்கை ஒன்று முன்வைக்கபட்டது .

இருந்து போதும் குறித்த நானுஒயா நகரில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இருந்து 100மீற்றர் தொலைவில் பேருந்து தரிப்பிடம் ஒன்று நிர்மானிப்பதற்கு பிரதேச அபிவிருத்தி கூழு கூட்டத்தில் கடந்த வருடம் முடிவுகள் எட்டபட்டநிலையில் இதவரைகாலபகுதியில் நானுஒயா நகரதிற்கான ஒரு மாற்று பேருந்து தரிப்பிடம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கபட வில்லையென ஊடகவியலாளர்களினால் கேள்வி எழுப்பபட்டபோது நானுஒயா நகரத்திற்கான பழைய பேருந்துதரிப்பிடம் ஒன்று காணபடுகிறது.

IMG-20180312-WA0000

இதற்கு மாறாக வேறு ஒரு பேருந்தி தரிப்பிடம் அவசியமில்லையென நானுஒயா பொலிஸ் உத்தியோகத்தரால் 12.03.2018.திங்கள் கிழமை முன்வைக்கபட்ட கருத்துக்கமைய நானுஒயா பேருந்து தரிப்பிடம் குறித்த எதிர்வரும் 2018.09.09ம் மாதம் இடம்பெறவுள்ள நுவரெலியா பிரேதேச அபிவிருத்தி கூழு கூட்டத்தில் அறிக்கை ஒன்றை சமர்பிக்குமாறு நானுஒயா பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கபட்டது.

இது இவ்வாறு இருக்க நானஒயா பேருந்து தரிப்பிடத்தில் அமைக்கபட்டுள்ள பேருந்து தரிப்பிடத்தில் நுவரெலியா நானுஒயா செல்லும் பேருந்து மாத்திரம் நிறுத்தபடுவதாகவும் அட்டன் நுவரெலியா,நுவரெலியா டயகம நுவரெலியா தலவாகலை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் நானுஒயா தரிப்பிடத்தில் நிறுத்துவதற்கு அனுமதி வழங்கபடாமையினால் நானுஒயா பேருந்து தரிப்பிடத்தில் இருந்து சுமார் கிலோமீற்றர் தொலைவில் மற்றய பேருந்துகள் நிறுத்தபடவதனால் பயணிகள் விரைந்து செல்ல முயற்சிகின்றைமையால் கூடுதலான விபத்துக்கள் இடம்பெறுவதாகவும் ஆராயபட்டமை குறிப்பிடதக்கது.

இதன் போது நானுஒயா நகரில் இலங்கை மின்சார சபையினால் நாட்டபட்டிருக்கின்ற மின்சார கம்பத்தின் மீதே பேருந்து தரிப்பிடம் என பெயர் பலகை ஒன்று காட்சிபடுத்தி பட்டிருக்கின்றமையால் பயணிகள் ஒவ்வொறுவரும் வர்த்தக நிலையங்களுக்கு மன்பாக நின்று பேருந்தினை நிறுத்தி பயணிப்பதாகவும் தெரிவிக்கபடுகிறது.

இதேவேலை நுவரெலியாவில் இருந்து தலவாகலைக்கு செல்லும் அதிகமான பேருந்துகள் குறுக்கு வீதியில் பயணிப்பதாகவும் பிரதான வீதியில் பேருந்துகள் குறைவாக காணபடுவதாக முன்வைக்கபட்ட கோறிக்கைக்கு அமைய கடந்த வருடம் இடம் பெற்ற பிரதேச அபிவிருத்தி கூழு கூட்டத்தில் புதிய நேர அட்டவானை ஒன்று தயாரிக்கபட்டு குழு ஒன்று தெரிவுசெய்யபட்டு நீதிமன்றத்தில் அனுமதி பெற்றும் குறித்த வீதியில் நேர அட்டவானை படி பேருந்துகள் முறையாக பயணிப்பதில்லையெனவும் முறைபாடு ஒன்று முன்வைக்கபட்டது

இதில் பாரதி அபிவிருத்தி சங்கம் முன்வைத்த முறைபாட்டுக்கமைய குறித்த பேருந்துகள் அனைத்தும் நேரஅட்டவானையின் படி பேருந்துகள் பயணிக்கின்றதா தொடர்பில் அறிக்கை ஒன்றை 04.09.2018.அன்று இடம் பெறுகின்ற பிரதேச அபிவிருத்தி கூழு கூட்டத்தில் அறிக்கை ஒன்று சமர்பிக்கபட வேண்டுமெனவும் நானுஒயா பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கபட்டமை குறிப்பிடதக்கது.

 

டி.சந்ரு,சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here