நானுஓயா எடின்பிரோ தோட்டத்தில் நேற்று இரவு இடம்பெற்ற தீ விபத்துச் சம்பவமொன்றில் வீடொன்றும் அவ்வீட்டிலிருந்த உடமைகளும் முற்றாக எரிந்து சாம்பலாகியதாகப் பொலிஸார் தெரிவித்தனர்
வீட்டில் நேற்று இரவு 10 :30 மணியளவில் மின்சார கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டதாகவும் சம்பவத்தின் போது வீட்டில் இரு பிள்ளைகள் உட்பட தாய் மாத்திரம் இருந்துள்ளதாகவும் , இவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் எனவும்
இந்த தீ விபத்தில் உயிர்சேதம் எதுவும் இல்லை எனவும் , வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானதாகவும் நானுஓயா பொலிஸார் தெரிவிக்கின்றன
வீட்டில் தீ பற்றி எரியத் துவங்கியதும் விபரீதம் நடப்பதை அறிந்துகொண்ட அயலவர்கள், உடனடியாக பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்ததையடுத்து, நுவரெலியா மாநகர சபையிலிருந்து தீயணைப்புப் படையினர் வரவழைக்கப்பட்ட போதிலும் பாதை வசதி இன்றி தீயணைப்பு வாகனம் தீ பற்றிய வீட்டுக்கு அருகில் வர இயலாமல் போனது , இருந்து சுமார் மூன்று மணித்தியாலப் போராட்டத்தின் பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
வீடு முற்றிலும் தீப்பற்றியுள்ளதுடன், ஆடைகள் மற்றும் தளபாடங்களும் தீக்கிரையாகியுள்ளதாகவும் நானுஓயா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
டி சந்ரு