நானுஓயாவில் மண் சரிவு – போக்குவரத்து பாதிப்பு

நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியின் நானுஓயா வெண்டி கோனார் பகுதியில் இன்று காலை (5) மண் சரிவு உடன் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்தது இதனால் இவ்வீதியூடான போக்குவரத்து சுமார் நான்கு மணித்தியாலங்கள்
தடைப்பட்டது

இந்த மண்சரிவு காரணமாக நுவரெலியா, தலவாக்கலை மற்றும் மெராயா வழியூடாக டயகமைக்கான போக்குவரத்து முற்றாக பாதிப்பு ஏற்பட்டிருந்தது

இதனையடுத்து நீண்ட நேர சிரமத்தின் பின் அனைத்த முகாமைத்துவம் பொறுப்பதிகாரி நானுஓயா பொலிஸார் , நுவரெலியா வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மண்மேட்டினை அகற்றி இவ்வீதியின் போக்குவரத்தினை வழமைக்கு கொண்டு வந்தனர் .

எவ்வாறாயினும் குறித்த வீதியின் ஒரு வலி மாத்திரம் போக்குவரத்து இடம்பெறுவதற்க்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது

இப்பகுதியில் பல இடங்களில் மண்சரி வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதால் அப்பாதையில் பயணிக்கும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர் போலீசார் கேட்டுக்கொண்டனர் அத்தோடு நானும் ஓயா 109 கிலோமீட்டர் 100 மீட்டர் தூரத்திற்கு வீதியில் பாதி வெடிப்பொன்று ஏற்பட்டுள்ளது.

டி.சந்ரு