நானுஓயா பிரிவிற்குட்பட்ட ஈஸ்டேல் கிராமத்தில் மின்சாரம் தாக்கிய இளைஞர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞர் தனது வீட்டில் தொலைக்காட்சி பெட்டி சரியாக இயங்காததால் வீட்டின் மேல் மாடியில் பொருத்தப்பட்டிருந்த தொலைக்காட்சி என்டனாவை திருத்த சென்ற வேளையில் இவ்வாறு மின்சார தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
29 வயது இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
பின்னர் சம்பவம் அறிந்து குறித்த இடத்திற்கு விரைந்த நானுஓயா காவற்துறையினர் மின்சாரத்தை துண்டித்து குறித்த நபரின் சடலத்தை மீட்டுள்ளனர்.
சடலம் தற்போதைய நிலையில் நுவரெலியா பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் , நானுஓயா காவற்துறையினர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
டி.சந்ரு