கொழும்பிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதனால் அதில் பயணித்த பயணிகள் போக்குவரத்து சிக்கலை எதிர்கொண்டுள்ளனர்.
குறித்த ரயில் நானுஓயா புகையிரத நிலையத்தில் வைத்து 23.02.2018 அன்று மாலை 4.30 மணியளவில் தடம்புரண்டுள்ளதாக நானுஓயா புகையிரத அதிகாரிகள் தெரிவித்தனர். ரயிலின் என்ஜீன் பகுதியே இவ்வாறு தடம் புரண்டுள்ளது.
எனினும் அதில் பயணித்த பயணிகளை வேறொரு ரயிலுக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளதாக நானுஓயா ரயில் கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
எது எவ்வாறாகயிருந்தாலும் சில மணி நேரம் பயணிகள் போக்குவரத்து சிக்கல்களை எதிர்கொண்டமை குறிப்பிடதக்கது.
ரயில் பாதையை சீரமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும், அதன்பின் மலையக ரயில் சேவைகள் பாதிப்பில்லாமல் தொடரும் என அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்
(க.கிஷாந்தன்)