நானுஓயாவில் 17 பேருக்கு சுயதொழிலுக்கான கடைகள்

0
85

நுவரெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட நானுஓயா பிரதேசத்தில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் 17 பேருக்கு சுயதொழில் செய்யவென நுவரெலியா பிரதேச சபையால் அமைக்கப்பட்ட கடைகள் நேற்று திங்கட்கிழமை (28) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டன.

மத்திய மாகாண சபை மற்றும் நுவரெலியா பிரதேச சபை ஆகியன இணைந்து ஒதுக்கீடு செய்யப்பட்ட எட்டு மில்லியன் ரூபாவில் இக்கடைகள் நிர்மாணிக்கப்பட்டன.

நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜ் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே, முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ்.பி.ரத்நாயக்கா, மாகாண உள்ளூராட்சி மன்ற உதவி ஆணையாளர் யூ.பி.ஹேரத், டப்ளியூ.பி.விஜயவர்தன உட்பட சபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியின் ரதல்ல குறுக்கு வீதி சந்திக்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த 17 கடைகளுக்கு மத்திய மாகாண உள்ளூராட்சி சபை 04 மில்லியன் ரூபாவையும், நுவரெலியா பிரதேச சபை 04 மில்லியன் ரூபாவையும் வழங்கியுள்ளது. இக்கடைகளுக்கு மொத்தமாக 08 மில்லியன் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. .

இவ்வாறு திறந்து வைக்கப்பட்டுள்ள கடைகள் மூலம் தமது வியாபாரத்தை முன்னெடுக்கும் சுயதொழிலாளர்கள் ஊடாக நுவரெலியா பிரதேச சபைக்கும் வரிவருமானம் கிடைக்குமென நுவரெலியா பிரதேச சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here