நானுஓயா டெஸ்போட்டில் திருடச் சென்ற வீட்டில் கையடக்கத்தொலைபேசியை  விட்டு ஓடிய திருடன் 

0
150
நானுஓயா டெஸ்போட் தோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீட்டினுள் திருடும் நோக்குடன் ஒருவர் உள்நுளைந்துள்ளார் .

வீட்டினுள் திருடனை இருப்பதைக் கண்டு வீட்டு உரிமையாளர்கள் சத்தம் போட்டு அயலவர்களை அழைத்துள்ளார் , சத்தம் கேட்டு திருடன் வீட்டில் இருந்து தப்பியோடியுள்ளார் தப்பி ஓடியவனை அயலவர்கள் துரத்தி சென்ற போது கையடக்கத் தொலைபேசி தவறுதலாக விழுந்துள்ளது அதனை அறிந்து கொள்ளாத திருடன் தப்பி சென்றுள்ளார்.
வீட்டு உரிமையாளர்கள் கண்டெடுத்த கையடக்கத் தொலைபேசி மூலம் திருடனை அடையாளம் காண்பதற்கு நானுஓயா பொலிஸார் நிலையத்தில் கையடக்கத் தொலைபேசியை ஒப்படைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
நானுஓயா டெஸ்போட் தோட்டத்தில் கண்டெடுத்த கையடக்கத் தொலைபேசி சனிக்கிழமை மாலை நானுஓயா மாகாஎலிய தோட்டத்தில் கையடக்கத் தொலைபேசியும் , 23000/= ரூபாய் பணமும் களவாடப்பட்டதாக
இளைஞன் ஒருவரினால் ஞாயிற்றுக்கிழமை மாலை நானுஓயா
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளதாகவும் நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர் .
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
டி சந்ரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here