நுவரெலியா பிரதேச உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் கொட்டச்சி திறந்து வைத்தார்.பொலிஸ் மா அதிபர் புஜித்த ஜெயசுந்தர அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க வருடத்திற்கு ஒரு முறை
ஒவ்வொரு கிராமங்களிலும் பொலிஸ் காரியாலயம் அமைக்கப்படும் நிகழ்வு 20.05.2018ம் திகதி
நானுஓயா டெஸ்போட் வைத்தியசாலைக்கு அருகாமையில் நுவரெலியா பிரதேச உதவி பொலிஸ் அத்தியட்சகர்
ரஞ்சித் கொட்டச்சி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வின் போது நானுஒயா பொலிஸ் அதிகாரி பிரியந்த அமரசேகர டெஸ்போட் தோட்ட பொது
முகாமையாளர் அனுர திஸாநாயக்கரூபவ் நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர் எஸ். என்டனி கிராம
உத்தியோத்தர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது நானுஓயா பொலிஸ் அதிகாரி பிரியந்த அமரசேகர் அவர்கள் மக்களுக்கு சேவை செய்ய
வேண்டுமென்பதே எனது குறிக்கோள் என தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவிக்கையில ஒரு மாத காலத்தில் இலவச மருத்துவ முகாம்இலவச கண் பரிசோதனை சுற்று சூழல் சுத்திகரிப்பு கிரிக்கெட் சுற்றுப்போட்டி என இடம்பெற உள்ளது. அத்தோடு சிறு சிறு பிரச்சினைகளை இந் நிறுவனத்தில் மூலம் தீர்த்துக் கொள்ளலாம் என்றார்.
டீ. சந்ரு